அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள மிக முக்கிய அறிவிப்பு.!!

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ம் திகதி தொடக்கம் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இதனைத் தெரிவித்துள்ளார்.அதேபோல், தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8ம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.