சீமெந்திலான முகப்புக் கூரை இடிந்து வீழ்ந்து கட்டிடத் தொழிலாளி பரிதாபமாக மரணம்.!! யாழ் சுன்னாகத்தில் சோகம்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் காவல்துறை பிரிவிற்குட்டபட்ட சுன்னாகம், அம்பனைப் பகுதியில் வீடு திருத்த வேலையில் ஈடுபட்ட கட்டட கூலித்தொலிலாளி ஒருவர் கூரைத்தளத்தை உடைக்க முற்பட்ட வேளை சீமெந்திலான முகப்புக் கூரை விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாகவும், உயிரிழந்தவர் நவாலி கலையரசி லேனை சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான அல்ரர் போல் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவரின் சடலம் தற்போது தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.