கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் முயற்சியில் இலங்கையில் அறிமுகமாகும் புதிய துரித உணவு..!!

தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.உடனடியாக தயாரிக்கப்படும் துரித உணவுகளை உண்ணும் பழக்கமே இதற்கு காரணம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், ஆரோக்கியமான உணவு வகைகளை தேடி உண்பது சிரமமான இப்படியான காலத்தில் ஆரோக்கியமான மாற்று உணவை கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் கண்டுபிடித்துள்ளனர்.பலாக்காய் பிஞ்சு (பொலஸ்) மற்றும் காளான் சேர்த்து விஷமற்ற பர்கர் உணவை அவர்கள் தயாரித்துள்ளனர்.பர்க்கருக்கான பனிஸ் குரக்கன் மாவில் தயாரிக்கப்பட்டிருப்பது விசேட அம்சமாகும்.உடனடி உணவு வகைகளை விரும்பும் நபர்களின் உடலுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத இந்த புதிய பர்கர் உணவை கேட்கும் அளவுக்கு, தயாரித்து வழங்க முடியும் என மாணவர்கள் கூறியுள்ளனர்.