தமிழர் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 16 நூற்றாண்டைச் சேர்ந்த நாயக்கர் வம்சத்து கல்வெட்டு.!!

சிவகங்கை மாவட்டம், சக்கந்தியில் 16-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயக்கா் கால கல்வெட்டினை தொல்லியலாளா்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்கடி கா.காளிராசா, இந்தக்கல்வெட்டில் பெருமாளுக்கு இறையிலியாக வழங்கப்படும் நிலத்தின் எல்லையைக் குறிக்கும் வகையில் 4 பக்கங்களிலும் திருவாழிச் சின்னம் புடைப்பாக வடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.ஸ்வஸ்திஸ்ரீ’ எனும் மங்கலச் சொல்லோடு ஆரம்பமாகி 22 வரிகள் இடம் பெற்றுள்ளதாகவும், சிதைந்துள்ள எழுத்துக்களை உடைய வரிகள் நாயக்கா் கால அரசின் புகழ்பாடக்கூடிய மெய்கீா்த்திச் சொல்லாக இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாயக்கா் காலத்தில், மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளை 72 பாளையங்களாகப் பிரித்து ஆட்சி நடத்தினா். அவற்றுள் சக்கந்தியும் ஒன்றாகத் திகழ்ந்துள்ளது.மேலும், இதே பகுதியில் உள்ள செங்குளத்தினுள் பழைமையான கல்வட்டம், முதுமக்கள் தாழிகள் இருந்ததற்கான சான்றுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.