விபத்தில் சிக்கி காயமடைந்த நிலையில் வீதியில் செல்லும் பொதுமக்களிடம் உதவிகோரும் வாயில்லா ஜீவன்..!!

விபத்தில் சிக்கிய காயமடைந்த வாயில்லா ஜீவன் ஒன்று வீதியில் செல்வோரிடம் உதவி கேட்டு நிற்கும் அவலம் நம் நாட்டில் நடைபெற்றுள்ளது.வீதியின் குறுக்காக சென்ற ஆண் குரங்கு ஒன்று காயமடைந்த நிலையில் காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சொறிக்கல்முனை பகுதியில் வலசன் என கிராம மக்களால் அழைக்கப்படும் ஆண் குரங்கு ஒன்று வாகனம் ஒன்றில் மோதுண்ட நிலையில் காணப்பட்டது.இவ்வாறு காயமடைந்து அநாதரவாக வீதியோரத்தில் காணப்பட்ட குறித்த குரங்கு கடும் வலி காரணமாக ஏக்கத்துடன் பெரும் சத்தமிட்டு கத்துகின்றது.
பின்னர் காயமடைந்த குறித்த குரங்கினை அருகில் இருந்த வீட்டு உரிமையாளர் இனங்கண்டு மனிதபிமானத்துடன் உணவு மற்றும் நீரினை பெற்றுக்கொடுத்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக வனலங்கு ஜீவராசிகள் திணைக்களத்திற்கு மக்கள் அறிவித்துள்ளனர்.இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.