முடியாதென கைவிட்ட நோய்களையும் குணப்படுத்தும் அற்புதமான கீரை வகை..!! மிகக் குறைந்த நிலையில் நிறைந்த பலன்..!! தினமும் உண்ணுங்கள்..!!

குறைந்த விலையில் நிறைந்த சத்து தருவதில் கீரைகள் தான் மிகச்சிறந்த உதாரணம்.
தினமும் இல்லையென்றாலும் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கீரை எடுத்துகொண்டாலே பெருமளவு ஆரோக்கிய குறைபாடு நேருவதை தவிர்க்கலாம். அதிலும், சில கீரைகளில் இருக்கும் குறிப்பிட்ட சத்துகள் அளவிடமுடியாதவை. அப்படி ஒரு கீரைதான் சுக்குட்டி கீரை என்னும் மணத்தக்காளிக்கீரை.இந்த மணத்தக்காளி உடலுக்கு செய்யும் நன்மைகள் குறித்து தெரிந்துகொள்வோம்.வயிற்றுப்புண் வந்த பிறகு இந்த கீரையை சாப்பிடுவதை காட்டிலும் அடிக்கடி மணத்தக்காளிக்கீரையை சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்புண் பிரச்சனை எப்போதுமே இல்லாமல் இருக்கும்.அப்படி வயிற்றுப்புண் வந்தால் அவை அல்சர் வரை கொண்டுவிடும். இந்த காலங்களில் மணத்தக்காளிக்கீரையை தொடர்ந்து சேர்த்து வந்தால் விரைவில் வயிற்றுப்புண் குணமாகும்.வயிற்றிலும் உடல் உள்ளுறுப்பிலும் புண் இருந்தாலே அவை வாய் வழியாக வெளிப்படும்.அப்படியான ஒன்றுதான் வாய்ப்புண். வாய்ப்புண் வந்தால் பெருமளவு உணவின் மூலமே குணப்படுத்திவிட முடியும்.அதிகளவு புண், வலி, எரிச்சல், சாப்பிடமுடியாத அளவுக்கு உபாதை இருந்தால் அந்த நேரத்தில் கை கொடுப்பது மணத்தக்காளி கீரைதான்.வயிற்றுவலி, குடல் புண், நாக்கில் புண் போன்ற பிரச்சனை தீவிரமாக இருக்கும் போது மணத்தக்காளி கீரை இலையை மட்டும் எடுத்து இலேசாக நெய்விட்டு வதக்கி , மிக்ஸியில் அரைத்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும்.வேகமாக குணமடைய வேண்டுமெனில் மணத்தக்காளி கீரையை செடியில் பறித்து பச்சை இலைகளை அப்படியே வாயில் இட்டு மென்று சாறை புண்ணில் படும்படி வைத்திருந்து விழுங்கினால் வாய்ப்புண் குணமாகும்.இந்த கீரை கசப்பு தன்மை கொண்டது என்பதால் பச்சையாக சாப்பிடுவது சிரமமாக இருக்கும். ஆனால் வதக்கிய பிறகு இந்த கசப்பு மறைந்துவிடக்கூடும்.

சிறுநீர் சரியாக பிரியவில்லை என்று நினைப்பவர்களுக்கு கை கொடுக்க இந்த கீரை உதவும். சிறுநீர் பிரியவில்லை என்றாலே தாமதிக்காமல், இந்த கீரையை தான் தொடர்ந்து எடுத்துகொண்டு குறைபாட்டை சரிசெய்துகொள்வார்கள்.மணத்தக்காளி சிறுநீர் கோளாறை நீக்குவதோடு சிறுநீர் பிரியவும் வழி செய்யும். மலச்சிக்கல் இருந்தால் அவற்றையும் குணப்படுத்தும்.ஆண்களின் விந்தணுக்கள் வலிமையாக இருக்க வேண்டும். விந்தணுக்களின் உயிர்ப்பு அவர்களது நரம்புகளி வலுவிலும், இனப்பெருக்க உறுப்புகளின் ஆரோக்கியத்திலும் அடங்கியிருக்கிறது.ஆண்களுக்கு கீரை சமையலில் இந்த மணத்தக்காளிக்கீரையை அடிக்கடி பயன்படுத்த வேண்டும். ஆண்களுக்கு தாது பலம் தருவதில் இந்த கீரை சிறப்பாக உதவுகிறது. விந்தணுக்களை வலிமை படுத்துவதிலும் இவை உதவுகிறது.ஆஸ்துமா, காசநோய் இருப்பவர்கள் மணத்தக்காளி கீரையின் பழங்களை பறித்து அப்படியே சாப்பிட்டால் பலன் கிடைக்கும். இவ்வளவு பலம் தரும் கீரையை வாரத்தில் இரண்டு நாட்களாவது சமைத்து சாப்பிடுங்கள்.