கொரோனா தொடர்பில் உலகளாவிய ரீதியில் இலங்கையில் மட்டுமே இந்த நடைமுறை!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்ட சந்தர்ப்பம் முதல் அவர்களின் அனைத்து தகவல்களும் சேமிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். தான் அறிந்த அளவிற்கு பாதுகாப்பு புலனாய்வு பிரிவினைஇ கொரோனா கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்திற்காக பயன்படுத்திக் கொள்ளும் முதலாவது மற்றும் ஒரே நாடு இலங்கையாக தான் இருக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்த செயற்பாடுகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக புலனாய்வு பிரிவின் அனைத்து அதிகாரிகளும் தூங்காமல் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.சிங்கள ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.