தமிழகத்தில் மலர்ந்த மத நல்லிணக்கம்….இஸ்லாமியர் வீட்டில் நடந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு..!!

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ் நாட்டில் குறிஞ்சிநகர் கலையரங்கில் இந்து முன்னணியினர் விநாயகர் சிலை வைக்க முயற்சி மேற்கொண்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் போலீசார் அங்கு சிலை வைப்பதற்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதனை தொடர்ந்து அங்கு வைப்பதற்காக கொண்டு வரப்பட்ட சிறிய விநாயகர் சிலையை அதே பகுதியை சேர்ந்த முகம்மது உசேன் பாபு என்பவர் தனது வீட்டில் வைத்து வழிபாடு நடத்துமாறு கூறினார்.இதையடுத்து, முகம்மது உசேன் பாபு வீட்டின் முகப்பு பகுதியில் சிறிய விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது.இந்நிகழ்ச்சியில் முகம்மது உசேன் பாபு, கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த ஜேம்ஸ், இந்து முன்னணியை சேர்ந்த நகர துணை தலைவர் மாயாண்டி, பிரிதிவிராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பூஜையை ஆண்டவர் சுவாமிகள் நடத்தினார்.

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடந்த இந்த விநாயகர் சதுர்த்தி வழிபாடு அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.பின்னர் பூஜை செய்யப்பட்ட விநாயகர் சிலைமாலையில் பொலீஸ் பாதுகாப்புடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் கரைக்கப்பட்டது.