யாழ்- கொழும்பு ரயில் பயணிகளுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி…குளிரூட்டப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்..!!

கொழும்பு கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 29, 30, 31 மற்றும் செப்ரெம்பர் முதலாம் திகதி என நான்கு நாள்களுக்கு பரீட்சாத்தமாக நடத்தப்படும் இந்தச் சேவை மக்களின் தேவையறிந்து தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்று ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த மார்ச் 20ஆம் திகதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கொழுமத்பு கல்கிசை – காங்கேசன்துறை இடையேயான குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை ஆசனப்பதிவுகள் போதாத நிலை காணப்பட்டதால், மீள ஆரம்பிக்கப்படவில்லை.காங்கேசன்துறை – கோட்டை இடையிலான குளிரூட்டப்பட்ட நகர்சேர் தொடருந்து சேவை வரும் 29ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 5:10 மணிக்கு கல்கிசையிலிருந்து புறப்படும். அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 1:15 மணிக்கு கல்கிசை நோக்கிப் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சேவைக்கான ஆசனங்களை முன்பதிவு செய்ய முடியும் என்று ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.