இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் நீடிக்கும் மர்மம்.!! திடீரெனக் காணாமல் போன சிறுவனைத் தேடி அலையம் உறவுகள்.!!

பலாங்கொட பகுதியில் சஹன் குமார தர்மசிறி என்ற சிறுவன் காணாமல் போய் இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில்,அவர் குறித்த எந்த தகவலும் இதுவரையில் கிடைக்கவில்லை.இந்நிலையில், குற்றப்புல னாய்வு பிரிவின் முழு மேற்பார்வையில் குறித்த சிறுவனை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்கு தயாராக இருந்த போது, குறித்த சிறுவன் 2018ம் ஆண்டு ஜூலை மாதம் கா ணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.2018ம் ஆண்டு சஹன் குமார கா ணாமல் போனமை இலங்கையில் பரபரப்பான செய்தியாக பரவியிருந்தாலும், இதுபோன்ற சம்பவம் இதுவரை நடந்ததை எத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விடயம்.காணாமல் போன நாள் முதல், பொலிஸாரும், இராணுவமும் ஒரு வாரமாக அந்த பகுதியில் ஒரு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டன,எனினும், சிறுவன் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், சிறுவன் சிறுத்தைக்கு பலி ஆகினானா? அல்லது புதையல் வேட்டை அல்லது வேறு ஏதேனும் கு ற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.