நீண்ட நாட்களாக தனிஅறையில் பூட்டி வைக்கப்பட்டு அடித்து துன்புறுத்தப்ப்பட்ட ஏழு வயதுச் சிறுமி அதிரடியாக மீட்பு… !! தமிழர் பிரதேசத்தில் அவலம்..!!

வவுனியா, பெரியதம்பனைப் பகுதியில் வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட 7 வயது சிறுமி செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது; வவுனியா, செட்டிகுளம் பெரியதம்பன, மருதங்குளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து 7 வயதுச் சிறுமி ஒருவரை பல நாட்களாக தொடர்ச்சியாக தாயார் மற்றும் தாயாரின் மறுதார கணவர் ஆகியோர் அடித்து, சூடு வைத்து துன்புறுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில், இன்றைய தினமும் குறித்த சிறுமி தாயாரால் அடித்து துன்புறுத்தப்பட்டு வீட்டு அறை ஒன்றில் தனியாக வைத்து பூட்டப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களுக்கு தெரிய வர அவர்கள் அங்கு சென்றிருந்தனர்.இதன்போது வீட்டில் எவரும் இல்லாத நிலையில் குறித்த சிறுமியை வீட்டு அறை ஒன்றில் பூட்டி வைத்திருந்த நிலையில் மீட்டுள்ளனர்.செட்டிகுளம் பிரதேச செயலக பெண்கள், சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் சிறுமியின் வாக்குமூலம் மற்றும் சிறுமியின் உடலில் இருந்த துன்புறுத்தல் காயங்கள் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த சிறுமியை பறையனாலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுள்ளனர்.சிறுமி தொடர்பில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.