முதியவரின் மூக்கிற்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 11 குளவிகள்..!! பதுளையில் பயங்கரம்..!!

இலங்கையில் முதியவர் ஒருவரின் மூக்கிற்குள் நுழைந்து குளவிகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்தச் சம்பவம் இலங்கையில் தான் இடம்பெற்றுள்ளது. குளவிக்கொட்டிற்கு இலக்கான ஒருவரின் மூக்கிற்குள் இருந்து 11 குளவிகளை வைத்தியர்கள் அகற்றியுள்ளனர்.

இந்த அதிர்ச்சி சம்பவம் பதுளை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.குளவிக்கொட்டிற்கு இலக்கான 70 வயதான முதியவர் ஒருவரின் மூக்கிற்குள்ளிருந்தே குளவிகள் அகற்றப்பட்டன. அவரது உடல் முழுவதும் ஏராளம் குளவி கொடுக்குகள் இருந்தன. அவற்றையும் வைத்தியர்கள் அகற்றினர்.இதற்காக 3 வைத்தியர்கள், 6 தாதியர்கள் இரண்டு மணித்தியால முயற்சி மேற்கொண்டனர்.நேற்று மாலை கலஉட ஆதார வைத்தியசாலையிலிருந்து முதியவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.காட்டுக்குள் சென்ற முதியவர் குளவிக்கொட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்தார். கலஉட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.