இலங்கையில் இதுவரை சுற்றுலாவிற்கு பயன்படுத்தப்படாத இடங்கள்..!! அமைச்சர் பிரசன்ன வெளியிட்ட தகவல்..!

இலங்கையில் இதுவரை சுற்றுலாவுக்கு பயன்படுத்தப்படாத 2,600 தலங்கள் உள்ளதாகவும், இதுவரை யாரும் அவ்விடங்களை பயன்படுத்தவில்லை எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இவ்வாறு அழகிய 2,600 இடங்களும் இதுவரை இரகசியமாக இருந்துள்ள நிலையில் தற்போது அவை சுற்றுலாத்தலமாக, அடையாளம் காணப்பட்டுள்ளன.இந்த நிலையில் இவற்றை விரைவாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், கொரோனா வைரஸ் காரணமாக வேலை இழந்த சுற்றுலாத் துறையில் பணியாற்றும் ஊழியர்களின் சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அத்துடன் அனைத்து சுற்றுலா ஹோட்டல்களுக்கும் பயண நிறுவனங்களுக்கும் 4 சதவீத சலுகை வட்டி விகிதத்தில் கடன்களை விரைவுபடுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வரும்போது இந்த புதிய 2,600 சுற்றுலாத் தலங்களும் அபிவிருத்தி செய்யப்படும் என்று அமைச்சர் கூறினார்.கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளால் ஒரே நேரத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.