குரான் படிக்க வந்த சிறுமியை ரப்பர் குழாயினால் வெறித்தனமாக அடித்த ஆசிரியர்.!!(இணையத்தில் வைரலாகும் புகைப்படம்)

குர் ஆன் படிக்க மதரஸா வந்த சிறுமியை, மதபோதகர் ஒருவர் ரப்பர் குழாயிலேயே காட்டு மிராண்டித்தனமாக அடிக்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.இஸ்லாமிய மதக் கல்வி அளிக்கும் மதரஸாவில் சிறு குழந்தைகளை குரான் படிக்கவைக்க பெற்றோர்கள் அனுப்புவது வழக்கம்.. இவர்களுக்கு இந்த பள்ளியில் குரான் கற்று தருவதற்காக ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படுவார்.அந்த வகையில், பாகிஸ்தான் நாட்டில் உள்ள கராச்சி நகரில் மதரஸா பகுதியில் குழந்தைகள் பள்ளி ஒன்று உள்ளது.இந்த பள்ளியில் குழந்தைகளுக்கு குரான் பயிற்றுவிக்கப்படுகிறது.

சம்பவத்தன்று, மதபோதகர், ஒரு சிறுமியை ரப்பர் குழாயினை கொண்டு அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.குரான் படிக்க வைக்கவே அவர் கண்மூடித்தனமாக அந்த குழந்தையை தாக்குவது போல தெரிகிறது.அந்த பெண் குழந்தை வலி தாங்காமல், “அடிக்காதீங்க.. வலிக்குது” என்று கண்ணீரில் கதறியும் ஆசிரியர் மனம் கரையவில்லை.அவர் சிறுமியை அடித்துக்கொண்டே இருக்கிறார்.. அங்கிருந்த மற்ற குழந்தைகள் குரான் படித்து கொண்டே சிறுமி அடிவாங்குவதை பார்த்து மலங்க மலங்க பீதியில் விழித்து உட்கார்ந்திருக்கின்றனர்.இந்த வீடியோ, காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.உடனடியாக அம்மாகாண போலீசாரின் கவனத்துக்கும் எட்டியது.. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அப்பள்ளியில் மத போதகர்களாக இருந்து வந்த முகம்மது பரீத், அலி செயிட் என்ற 2 பேரை கைது செய்து தூக்கி ஜெயிலில் வைத்துள்ளனர்.