கல்கிஸை கடலில் மூழ்கி காணமல் போன இளைஞர்களில் ஒருவர் சடலமாக மீட்பு..!!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடலில் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த இரு இளைஞர்களில் ஒருவரது சடலம் தெளிவளை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இந்த சடலம் கரையொதுங்கியதாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.கல்கிஸ்ஸ கடலில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் குளிப்பதற்காகச் சென்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட 7 இளைஞர்களில் ஐவர் கல்கிஸ்ஸ பொலிஸ் நிலைய உயிர் பாதுகாப்பு பிரிவினரால் காப்பற்றப்பட்டனர்.எனினும் 18 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்களை மீட்க முடியாத நிலையில் அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்நிலைலேயே இன்று திங்கட்கிழமை காலை 18 வயதுடைய இளைஞனின் சடலம் தெஹிவளை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளது.

குறித்த இளைஞர்கள் பூண்டுலோயா பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். காணாமல் போயுள்ள 19 வயதுடைய மற்றைய இளைஞனை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.