வெளிநாட்டில் கோமா நிலைக்குச் சென்ற நோயாளியை 10.7 மில்லியன் ரூபா செலவில் கொழும்புக்கு அழைத்து வந்த இலங்கைக் குடும்பம்..!!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரிலுள்ள கல்ப் வெஸ்ட் கம்பனியில் கடந்த 13 வருடங்களாக விற்பனை மற்றும் சந்தை முகாமையாளராக தொழில்செய்து வந்தவர் அன்ட்றூ ரொஹன் சௌந்தரநாயகம் .இவர் கடவத்தையைச் சேர்ந்தவர். இரண்டு மாதங்களுக்கு முன் திடீரென சுகவீனமுற்று கோமா நிலைக்கு சென்றார்.

அவரது குடும்பத்தினரின் வேண்டுகோளின் பேரில் அவரை அவரது சவூதி அரேபிய கம்பனி விசேட ஜெட் விமானம் மூலம் 10.7 மில்லியன் ரூபா செலவில் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளது.கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அவர் இப்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,குறிப்பிட்ட நோயாளி கடந்த வியாழக்கிழமை விசேட விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார். அவருடன் அதே விமானத்தில் வைத்தியர்களும், உதவியாளர்களும் உடன் வந்தனர்.நோயாளி தற்போது நரம்பு வைத்தியர் சுனில் பெரேராவின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் சீக்கிரமே கோமா மயக்க நிலையில் இருந்து விடுபடுவார் என்று நம்புவதாகவும் சௌந்தர நாயகத்தின் மனைவி மார்கரட் தெரிவித்தார்.