கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியில் விரைவில் மாற்றம்.!! தமிழரசுக் கட்சியும் ஆதரவு..!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பொறுப்பில் மாற்றம் செய்வதை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சித் தலைமை தீர்மானித்துள்ளது. தமிழ் அரசுக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களுடன் பேசி, கட்சியின் தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்படி, மாவை சேனாதிராசா தனது நிலைப்பாட்டை மீளவும் இரா.சம்பந்தனிடம் உறுதிசெய்யவுள்ளார்.

கடந்த வாரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்டமைப்பின் பேச்சாளர் மாற்றத்தை மாவை சேனாதிராசா ஆதரித்திருந்தார். இந்த நிலையில், அந்த முடிவை கட்சியாகவும் இரா.சம்பந்தனிடம் அறிவிக்கவுள்ளார்.இன்று அல்லது நாளை இதற்கான அறிவித்தல் வழங்கப்படும் எனத் தெரிகிறது.