காதலனுடன் கதைக்க விடாமல் கைப்பேசியை மறைத்து வைத்த தாய்..தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட மகள்..!!

சிலாபத்தில் 20 வயதுடைய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தனது மகளின் காதல் தொடர்பை நிறுத்துவதற்காக அவரது கையடக்க தொலைபேசியை மறைத்து வைத்த காரணத்தினால் மகள் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சிலாபம், இனிகாடவில பிரசேத்தை சேர்ந்த ஹஷஜனஜ பியுமிக்கா என்ற இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.மகளின் காதல் தொடர்பினை நிறுத்துமாறு தாயார் பல முறை எச்சரித்த போதிலும், தொடர்ந்து கையடக்க தொலைபேசியில் காதலனுடன் மகள் பேசியுள்ளார். இதனால் கையடக்க தொலைபேசியை தாயார் மறைத்து வைத்துள்ளார்.கடந்த 20ஆம் திகதி காலை தனது கையடக்க தொலைபேசிக்காக தாய்க்கும் மகளுக்கும் இடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.இதனால் மன வருத்தமடைந்த மகள், தனது உடலுக்கு தீ வைத்துக் கொண்டுள்ளார். படுகாயமடைந்த நிலையில் சிலாபம் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.