உயிரிழந்த 12 வயது சிறுமியின் உடலை தண்ணீரில் குளிப்பாட்டிய குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பேரதிர்ச்சி..!!

இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமிக்கு இறுதிச்சடங்கின் போது உயிர் வந்து பின்னர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்தோனேசியாவை சேர்ந்த 12 வயது சிறுமி சிட்டி மஸ்ஃபுபா வர்தா உடல்நல கோளாறு காரணமாக கடந்த 18ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அன்று மாலை ஆறு மணிக்கு சிறுமி சிட்டி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சிறுமி சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய குடும்பத்தார் எடுத்து சென்றானர்.வீட்டில் சடங்கின் ஒருபகுதியாக சிறுமியின் உடலை தண்ணீரை கொண்டு குளிப்பாட்டினார்கள். அந்த சமயத்தில் சிறுமி திடீர் என்று கண்விழித்ததோடு அவரின் இதயமும் துடித்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு சிறுமியை தூக்கி கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது.ஆனால், ஒரு மணி நேரத்தில் சிறுமி மீண்டும் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது.அதாவது இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது என கூறியுள்ளனர்.