உலகத்தமிழ் இசை ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்பான செய்தி… கொரோனா தொற்றிலிருந்து மீண்டார் பாடகர் எஸ்.பி.பி..!!

கொரோனா வைரஸ் தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு “தொற்று இல்லை (நெகடிவ்)” என வந்துள்ளதாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், அவரது உடல் நலனுக்காக பிரார்த்தனை செய்த அனைவரும் நன்றி எனவும் தெரிவித்திருக்கிறார்.