நாட்டிலுள்ள அனைத்துப் பொதுமக்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவித்தல்..!

2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் தேசிய அடையாள அட்டைகளை கொண்டு அனைத்து நபர்களையும் வாக்காளர் பட்டியலில் உள்ளடக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆணைக்குழு கூறியுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயரை உள்ளடக்கிக்கொள்ள தமது பிரதேசத்தில் உள்ள கிராம சேவகரை சந்தித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையளிக்க வேண்டும்.கடந்த பொதுத் தேர்தல் காரணமாக 2021ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலை திருத்தும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன.புதிய வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.