அமைச்சுப் பதவிக்காக அரசாங்கத்திடம் கெஞ்சி நிற்கும் எதிர்க்கட்சிப் பிரபலம்..!!

அரசாங்கத்துடன் இணைவதற்கு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் மீண்டும் மீண்டும் முயற்சிப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த நபர் முன்னதாக தனக்கு அமைச்சுப்பதவி ஒன்றைத் தரமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.எனினும், தற்போது அமைச்சுப்பதவி இல்லை என்றால் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் பதவியாவது வழங்குமாறு கோரியுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.சமகி ஜன பலவேகய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர் கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக அரசாங்கத்தில் சேர முயற்சிக்கிறார்.மேலும் பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தில் சேர அமைச்சரவை பதவிக்கு விண்ணப்பித்துள்ளார் எனவும் அறியமுடிகின்றது.