தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த நான்கு வயதுச் சிறுமி வீடு புகுந்து கடத்தல்.!! இன்று அதிகாலை நடந்த உறைய வைக்கும் பயங்கரம்.!!

இன்று அதிகாலை 3 மணியளவில் இங்கினியாகல மீனவ கிராமத்திலுள்ள வீடொன்றில் புகுந்து நான்கரை வயது சிறுமியை இனந்தெரியாத நபர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார்.சிறுமி தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்த போது குறித்த நபர் அவ்அறைக்குச் சென்று சிறுமியை கடத்திச் சென்றுள்ளார். இந்த நபர் சுமார் 2 அரை கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தனது வீட்டிற்கு சிறுமியை எடுத்துச் சென்றுள்ளார். தாய் நித்திரை விட்டு எழும்பிய போது, குழந்தையை காணாத நிலையில் அயலவர்களுடன் இணைந்து தேடியுள்ளார். இங்கினியாகல பொலிசிலும் முறைப்பாடு செய்துள்ளார்.

அப்பகுதி பற்றி நுணுக்கமாக அறிந்து வைத்திருந்த அம்பாறை சிவில்பாதுகாப்பு படை அணியின் அதிகாரி சிறுமியை தேடிக் கண்டு பிடிக்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் பணிக்கப்பட்டார்.சிவில் பாதுகாப்பு அதிகாரி பொலிஸ் நிலையத்திற்குச் செல்லும் வழியில் சிறுமியொருவர் அழுதுகொண்டிருக்கும் சத்தத்தை கேட்டு சந்தேக நபரையும் சிறுமியும் இருக்கும் இடத்தை கண்டு பிடித்துள்ளார்.
சந்தேக நபர் அந்த சந்தர்ப்பத்தில் போர்வையொன்றை அணிந்திருந்ததாக சிவில் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் மதுபோதையில் இருந்துள்ளார்.