யாழில் இடம்பெற்ற கோர விபத்து..பரிதாபமாகப் பலியான குடும்பஸ்தர்..!!

மணலுடன் சென்ற உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் இருந்து பயணித்த குடும்பத்தலைவர் ஒருவர் தவறி வீழ்ந்து சில்லுக்குள் சிக்குண்டு உயிரிழந்தார்.சங்கானை விழிசிட்டியில் நேற்று (23) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றது.

சங்கானை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான உ.சுரேஸ்குமார் (33) என்பவரே உயிரிழந்தார்.மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரம் வீதியைவிட்டு விலகி மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.