கோஸ்டி மோதலில் பரிதாபமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவன்.!! மட்டக்களப்பில் பயங்கரம்.!!

ஏறாவூரில் இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் பாடசாலை மாணவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் செங்கலடி சந்தை வீதியைச் சேர்ந்த ரமணன் திவிராஜ் என்ற 15 வயது மாணவனே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்.சம்பவம் பற்றி தெரியவருகையில், சிறு வாய்த்தர்க்கமாக ஆரம்பித்த விடயம், கோஷ்டி மோதலாக மாறி பின் பழி தீர்க்கும் வகையில் வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.சடலம் உடற் கூறாய்வுப் பரிசோதனைக்காக ஏறாவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.இச்சம்பவம்பவத்தில் ஈடுபட்டோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்கின்றனர்.