தேசியப்பட்டியல் மூலம் மீண்டும் நாடாளுமன்றத்திற்குள் நுழைகிறார் ரணில்..?

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே பரிந்துரை செய்யப்படுவதாக சிறிகொத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.தேசியப் பட்டியலில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நாடாளுமன்றத்திற்கு நியமிப்பதற்கான பிரேரணை, கட்சியின் செயற்குழுவில் பரிசீலிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு ஒருவரை பரிந்துரைப்பதற்கு மேலதிகமாக ஒரு வார கால அவகாசத்தினை வழங்குமாறு தேசியத்தேர்தல் ஆணைக்குழுவிடம் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதன்படி, இந்தப் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவே பரிந்துரைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய பட்டில் உறுப்பினராக ரணில் விக்ரமசிங்கதான் தெரிவு செய்யப்பட வேண்டுமென கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.