சற்று முன்னர் கிடைத்த செய்தி…இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு..!!

இன்று (21) மேலும் ஒன்பது பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து நாடு திரும்பிய 6 பேரும், இந்தியாவின் சென்னையிலிருந்து நாடு திரும்பிய 2 பேரும், துருக்கியில் இருந்து நாடு திரும்பிய ஒருவருமே இன்று இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.அதன்படி இலங்கையில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,927 ஆக அதிகரிக்கிறது.கடந்த 24 மணி நேரத்தில் வைரஸால் பாதிக்கப்பட்ட 24 நபர்கள் குணமடைந்து வெளியேற்றப்பட்டனர். இதன்படி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,789 ஆக உயர்ந்தது.வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையிலிருந்து 16 பேர் வெளியேறினர்.மேலும் 8 பேர் தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறினர்.இரண்டு வெளிநாட்டினர் உட்பட 127 நபர்கள், நான்கு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 65 நபர்கள் தற்போது கண்காணிப்பில் உள்ளனர்.