கட்டுநாயக்க விமான நிலைய விரிவாக்கம் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு..!!

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும் செயற்திட்டங்களை உரிய தினத்திற்குள் பூர்த்தி செய்யாத ஒப்பந்தக் கம்பனிகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்து அவற்றுக்கான கொடுப்பனவுகளை இடைநிறுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலைய அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கியுள்ளார்.

அந்த கட்டுமான நிறுவனங்களுக்கு தமது வேலைகளைப் பூர்த்தி செய்வதற்காக தொடர்ந்தும் மேலதிக காலத்தை வழங்க வேண்டாமென அமைச்சர் கூறியுள்ளார். விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகளிலுள்ள முன்னேற்றங்களை ஆராயும் ஒரு கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
விமான நிலையத்தின் இரண்டாவது ஓடு தளம் மற்றும் பயணிகள் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது. இது விமான நிலையத்தின் மிகப்பெரிய செயற்திட்டமாகும் என அமைச்சர் அங்கு சுட்டிக்காட்டினார். இதனை விரைவில் பூர்த்தி செய்வது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.
விமான நிலையத்தின் நடைமுறைச் செயல் திட்டத்தை மூன்று வாரங்களுக்குள் தன்னிடம் ஒப்படைக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளார்.