கொரொனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளித்த ஒரு தொகுதி தாதியர்கள் பணி முடிந்து வெளியேற்றம்…!!

இலங்கையின் கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளிக்கும் பிரதான வைத்தியசாலையான கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் 14 நாட்கள் பணியாற்றிய பின்னர் அங்கிருந்து திரும்பிய ஒரு தொகுதி தாதியர்களிற்கு பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.
உலகை உலுக்கி வரும் கொரோனா தொற்று, இலங்கைக்குள்ளும் நுழைந்துள்ளது.கடந்த சில வாரங்களில் இலங்கையில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்களிற்கு கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலை உள்ளிட்ட சில வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நோயாளர்களின் திடீர் அதிகரிப்பையடுத்து, பிற வைத்தியசாலைகளில் இருந்து தாதியர்கள் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.இப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து 15 தாதியர்கள் கடந்த 14 நாட்களின் முன்னர் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.14 நாட்கள் அங்கு கொரோனா தொற்றாளர்களிற்கு சிகிச்சையளித்த பின்னர், அந்த குழு அங்கிருந்து வெளியேறியது.அவர்களை ஐடிஎச் வைத்தியசாலை நிர்வாகம் வழியனுப்பி வைத்தது. அத்துடன், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவர்களிற்கு வரவேற்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.