யாழ் நகரில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய நபர் அதிரடியாகக் கைது..!!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சிவில் உடையில் யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திற்கு வந்து முச்சக்கரவண்டி வாடகைக்கு கேட்டபோது, அதிகமான பணம் சொல்லியிருக்கின்றார்கள்.பணம் அதிகம் என்ற காரணத்தினால், அவர் ஆட்டோ வேண்டாம் என கூறிவிட்டுச் சென்ற போது, அவரை கிண்டல் அடித்துள்ளனர். அதன்போது, ஏன் கிண்டல் அடிக்கின்றீர்கள் என கேட்டதற்கு, பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.பொலிஸ் உத்தியோகத்தர் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில், தாக்குதல் மேற்கொண்ட பிரதான நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.