மக்கள் முன்னணியின் முக்கிய பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட மணிவண்ணனை தம்பக்கம் இழுக்க தமிழரசுக் கட்சி தீவிர முயற்சி.!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை தமது பக்கம் இழுத்தெடுக்க இலங்கை தமிழ் அரசு கட்சியினர் பகீரத பிரயத்தனத்தில் ஈடுபட்டனர்.எனினும், தற்போதைக்கு அந்த முயற்சிக்கு மணிவண்ணன் இணக்கம் தெரிவிக்கவில்லை.முன்னணிக்குள்ள ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதலையடுத்து, மணிவண்ணனை இழுத்தெடுக்க இந்த முயற்சி நடந்தது.தொடர்ந்து கட்சியில் நீடிக்கும் முடிவிலேயே தான் உள்ளதாகவும், இப்போது எந்த வெளி அணியிலும் இணையவில்லை.எனது விளக்கத்தை கட்சிக்கு அனுப்பியுள்ளேன். அவர்களின் முடிவை பொறுத்து எதிர்காலத்தில் திட்டமிடுவேன்“ என தமிழ் அரசு கட்சியினருக்கு குறிப்பிட்டுள்ளதாக தெரிய வருகிறது.இதேவேளை, மணிவண்ணனை மையப்படுத்தி இளைஞர் தரப்பொன்றை கட்டியெழுப்ப புலம்பெயர் தரப்புக்கள் சில திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.