கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதாரப் பரிசோதகர்களுக்கு அடித்தது அதிஷ்டம்..!! இலங்கை அரசின் முக்கிய அறிவிப்பு..!!

இலங்கையில் கொரோனா இடர்காலத்தில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சுகாதார பரிசோதகர்களின் சேவையை பாராட்டி அவர்களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, கொழும்பில் ஆகஸ்ட் 30 க்கு முன்னர் 800 க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் இத் திட்டத்தின் முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சின் கொவிட் – 19 விசேட செயற்திட்டத்தின் நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜே.எம்.டபிள்யூ. ஜெயசுந்தரா பண்டாரா தெரிவித்துள்ளார்.