வெளிநாட்டுப் பணத்தினால் வடக்கு தமிழர் தேசத்தில் அநியாயமாக அழியும் தமிழ் இளைஞர்கள்..!!

வெளிநாட்டில் இருந்து வரும் காசு, விதம் விதமாக மோட்டார் சைக்கிளை வாங்கி ஓடும் தமிழ் இளைஞர்கள். இது தான் இன்றைய நிலை.வட கிழக்கு பகுதியில் இளைஞர்கள் இடையே மோட்டர் பைக் என்பது பெரும் மோகமாக உள்ளது.

அனுபவமே இல்லாத பலர் அதி கூடிய வேகம் கொண்ட மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகிறார்கள். இறுதியில் பெரும் விபத்தில் சிக்கி இறந்து போகிறார்கள். அந்த வகையில், கிளிநொச்சி வீதி விபத்தில் இரு இளைஞர்கள் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்கள்.