அனைத்து மின்பாவனையாளர்களுக்கும் நிம்மதி தரும் செய்தி..!!

நாளை வெள்ளிக்கிழமையின் பின்னர் நாளாந்த மின்வெட்டு அமுல்ப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட கோளாறை சரி செய்ய நாடளாவிய ரீதியில் 4 வலயங்களாக பிரிக்கப்பட்ட, பகலில் 1.45 மணி நேரமும், இரவு 1 மணி நேரமும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.திருத்தப்பணிகள் விரைவில் முடிந்து வருவதால், நாளை வெள்ளிக்கிழமையின் பின்னர் மின்வெட்டு இராது என அறிவிக்கப்பட்டுள்ளது.