எக்மோ உதவியுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை!!

எக்மோ உதவியுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 5 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கடந்த 14 ஆம் திகதி முதல் மோசமடைந்து வருகின்றது.இருப்பினும் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது நிலையில் அவ்வப்போது அவருடைய உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது.அதன்படி எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று தொடர்ந்து தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும் செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ கருவிகள் உதவியுடன் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்றும் அறிவித்துள்ளது.அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் குழு தொடர்ந்து அவரைக் கண்காணித்து வருகின்றது என்றும் அவரது உடல்நிலை தற்போதுவரை திருப்திகரமான நிலையில் உள்ளது என்றும் மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.