வெளிநாடொன்றில் இலங்கையர்களுக்கு குவிந்துள்ள பெருமளவு வேலைவாய்ப்புகள்.!!

ஜப்பானிற்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அனுப்பும் போது ஏழைக் குடும்பங்களுக்கும், சமூர்த்தி பெறும் குடும்ப உறுப்பினர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டிய வறுமை கோட்டிலுள்ள குடும்பங்கள், சமுர்தி குடும்பங்களுக்கு இந்த சந்தர்ப்பம் கிடைக்காமல் உள்ளது. அரச மற்றும் தனியார் பிரிவுகள் இரண்டிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.IM Japan ஜப்பான் நிறுவனம் மற்றும் ஜப்பான் தொழில் சந்தர்ப்பத்திற்காக இலங்கையில் உரிமம் பெற்றவர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
இதன் போது பாரிய அளவிலான இலங்கையர்களுக்கு ஜப்பானில் தொழில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக அந்த நாட்டு தொழிலுக்கான பயிற்சியும் ஜப்பான் மொழி பயிற்சியும் வழங்க வேண்டியது அவசியம் ஜப்பான் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.இலங்கை பணியாளர்களுக்கு ஜப்பானில் அதிக கோரிக்கை உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பாரிய அளவில் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் அவர் இணக்கம் வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.