இலங்கையின் புதிய நாடாளுமன்றில் குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் சற்று முன் தெரிவு..!!

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 9ஆவது நாடாளுமன்றத்தின் குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு இன்று இடம்பெற்றது.இந்த நிலையில், இந்த பதவிக்கு மாற்று நபர் பரிந்துரைக்கப்படாத நிலையில், குழுக்களின் பிரதி தவிசாளராக அங்கஜன் இராமநாதன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.