யாழ்.கொடிகாமத்தில் 30 பேருக்கு திடீரென கொரோனா பரிசோதனை..!

யாழ்.கொடிகாமத்தில் நேற்றுக் காலை திடீரென 30 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.கொடிகாமம் பேருந்து தரிப்பிடத்தின் மேல் தளத்தில் சாவகச்சேரி பிரதேச சபை ஊழியர்கள் மற்றும் தபால் நிலைய ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இந்தப் பரிசோதனைகளை சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் மேற்கொண்டிருந்தனர்.கொரோனா சமூகப் பரவலை இனங்காணும் நோக்கில், தென்மராட்சிப் பகுதியில் 180 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.இதன் ஆரம்பமாக அண்மையில் சாவகச்சேரியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.