இலங்கை நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வுகள் சற்று முன்னர் ஆரம்பம்..!! புதிய சபாநாயகரும் நியமனம்..!

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மகிந்த யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமாகியுள்ளது.காலை 9.30 மணிக்கு 9வது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டம் இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்றத்திற்கு தெரிவாகிய உறுப்பினர்கள் தற்போது நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
9வது நாடாளுமன்ற சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. பாராளுமன்ற நடவடிக்கைகளைத் தொடங்க, நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிகா தசநாயக புதிய நாடாளுமன்றத்தை கூட்ட ஜனாதிபதி வெளியிட்ட பிரகடனத்தைப் படித்தார்.