மிகவும் கவலைக்கிடமான நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை..!! தீவிர கண்காணிப்பில் மருத்துவர்கள்..!

இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில் இருக்கிறார், தற்போது நிபுணர்களின் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார் என்று மருத்துவமனை தெரிவித்துள்ளது.84 வயதான பிரணாப் முகர்ஜி மூளை ரத்த கட்டிக்கு அவசர அறுவை சிகிச்சைக்காக டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.கொரோனா உறுதி பின்னர் கடந்த வாரம் திங்கள்கிழமை காலை அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாக நேற்று அவரது மகன் அபிஜித் முகர்ஜி ட்விட்டரில் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.