வட்ஸ் அப்ற்கு போட்டியாக தனது புதிய பதிப்பில் சவால்விடும் ரெலிகிராம் அப்..!!

குறுஞ்செய்தி பரிமாற்றம், வீடியோ மற்றும் குரல்வழி அழைப்பு போன்றவற்றினை மேற்கொள்வதற்கு உதவும் முன்னணி அப்பிளிக்கேஷனாக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

இதற்கு போட்டியாக டெலிகிராம் எனும் அப்பிளிக்கேஷனும் காணப்படுகின்றது.எனினும், இதுவரை காலமும் வீடியோ அழைப்பு வசதியினை டெலிகிராம் கொண்டிருக்கவில்லை.தற்போது இவ் வசதியும் டெலிகிராமில் தரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கணவே இறுதியாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த பீட்டா பதிப்பில் குறித்த வசதி தரப்பட்டிருந்தது.இந்நிலையிலேயே தற்போது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கக்கூடியதாக தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிப்பு 0.7 இனை தரவிறக்கம் செய்து நிறுவுவதன் மூலம் இப் புதிய வசதியை பெற முடியும்.