கொரோனாவிற்கு எதிரான தமது தயாரிப்பு தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்த விருப்பம் வெளியிட்ட ரஷ்யா..!!

ரஸ்யா தாம் உருவாக்கியுள்ள கொரோனாவிற்கான தடுப்பூசியை இலங்கையில் அறிமுகப்படுத்த விருப்பம் வெளியிட்டுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனவை சந்தித்த இலங்கைக்கான ரஸ்ய தூதர் யூரி பி.மெட்டேரி, தனது நாடு உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு அறிமுகப்படுத்த முன்மொழிந்துள்ளார்.இந்த நிலையில் தடுப்பூசியை பெற ஆர்வமாக இருந்தால் ரஸ்யாவில் உள்ள முகவர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதற்கு பதிலளித்த வெளியறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, நாட்டின் சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின் இலங்கை பதிலளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை இந்த தடுப்பூசி திறம்பட செயல்படுவதாகவும், நிலையான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகவும் ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்திருந்தார்.அத்துடன் ஜனாதிபதி புடினின் மகளுக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்பட்டதாக ரஸ்யத் தகவல்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.