காணியொன்றை துப்பரவு செய்த போது யாழில் சிக்கிய வெடிபொருட்கள்..!!

மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட மயிலிட்டி வடக்கில் காணி ஒன்றைத் துப்பரவு செய்த பொழுது வெடிபொருட்கள் தென்பட்டுள்ளதாக பலாலி பொலிஸாா் தொிவித்துள்ளனா்.காணி உாிமையாளா் கனரக வாகனத்தின் உதவியுடன் துப்பரவு பணியில் ஈடுபட்ட போது மண்ணுக்குள் புதையுண்ட நிலையில் இவை காணப்பட்டுள்ளன.பொலிஸ் விசேட அதிரடிப்படை வெடிபொருட்களை செயலிழக்கும் நடவடிக்கைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பலாலிப் பொலிஸாா் தொிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.