யாழ் தங்க நகைப் பிரியர்களுக்கு….தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் தங்கம் விற்பனை!

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை நேற்று ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்த நிலையில் இன்று மீளவும் உயர்வடைந்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கடந்த ஜூலை 22 ஆம் திகதி 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுணுக்கு ஒரு லட்சம் ரூபாயை எட்டியது.அதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து ஜூலை இந்த மாத ஆரம்பத்தில் ஒரு பவுணுக்கு விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயைத் தொட்டது.யாழ்ப்பாணத்தில் நேற்று (ஓகஸ்ட் 18) செவ்வாய்க்கிழமை 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை 95 ஆயிரத்து 350 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு பவுண் ஆபரணத் தங்கம் 94 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

24 கரட் தூய தங்கம் இன்று பவுண் ஒன்று ஒரு லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 24 கரட் தூய தங்கத்தின் விலை பவுண் ஒன்று ஒரு லட்சத்து 3 ஆயிரம் ரூபாயாகக் காணப்பட்டது.