சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை மறைந்த யாழ்ப்பாணக் குடும்பம் தனிமைப்படுத்தல்…!!

யாழ்.அரியாலை சுவிஸ் போதகரின் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மையை வெளியிடாமல் மறைந்திருந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறும் போது, அரியாலை தேவாலயத்தில் ஆராதனையில் கலந்து கொண்ட உண்மைமைய மறைத்து வட்டுக்கோட்டையை சேர்ந்த குறித்த குடும்பம் மறைந்திருந்த நிலையில், 10 பேர் அடையாளம் காணப்பட்டு நேற்றய தினம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர் எனவும் அவர் மேலும் கூறினார்.