சிறையிலிருந்து கொண்டே தேர்தலில் வெற்றிபெற்ற பிள்ளையான்… பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள நீதிமன்றம் அனுமதி..!!

எதிர் வரும் 20ம் திகதி வியாழக்கிழமை இடம்பெறும் நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் கலந்து கொள்ள சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு (பிள்ளையான்) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.


சிவனேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டுமென அவரது கட்சியினர் இன்று, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.மனுவை ஆராய்ந்த மேல் நீதிமன்றம், பிள்ளையான் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அனுமதியளித்தது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசெப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் கைதான பிள்ளையான், கடந்த 4 வருடத்திற்கும் மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிள்ளையானை நீதிமன்றத்தில் இருந்து சிறைச்சாலைக்குக் கொண்டுச் செல்லும்போது ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், விரைவில் விலங்குகளை உடைத்து வெளியே வருவேன் என குறிப்பிட்டுள்ளார்.