சிம்மத்திலும் மேஷத்திலும் இடம்பெறப் போகும் மாற்றத்தினால் இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் ராஜயோகமாம்.!! நீங்களும் இந்த ராசியா..?

ஆவணி மாதம் சிம்மம் மாதம். சிம்ம ராசியில் சூரியன் கம்பீரமாக ஆட்சி பெற்று சஞ்சரிக்கும் மாதம். கூடவே புதன் இணைவும் அற்புதமாக அமையப்போகிறது. ஆவணி மாதத்தின் மத்தியில் சுக்கிரன் கடகம் ராசிக்கு இடப்பெயர்ச்சியாகிறார். புதன் பகவான் மாத பிற்பகுதியில் சிம்மம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி ஆட்சி உச்சம் பெற்று அமர்வதும் சிறப்பு.மாத இறுதியில் குருபகவானின் வக்ர சஞ்சாரம் முடிவுக்கு வருகிறது. அதே நேரத்தில் மேஷத்தில் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய் மாத இறுதியில் வக்ரகதியில் சஞ்சரிப்பார்.ஆவணி மாதத்தில் ஆட்சி பெற்ற கிரகங்களின் சஞ்சாரத்தினால் எந்த ராசிக்காரர்களுக்கு ராஜயோகமும், திடீர் அதிர்ஷ்டமும் வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்:செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே ஆவணி மாதம் அற்புதங்கள் நிகழபோகிறது. அரச கிரகங்கள் ஆட்சி பெற்று 1,5,9ஆம் வீட்டில் அமர்ந்துள்ளன. புத்திர பாக்கியம் கிடைக்கப் போகிறது. திருமண தடை ஏற்பட்டு வந்தவர்களுக்கு நிச்சயம் தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும். சுக்கிரன் 3 மற்றும் நான்காம் வீட்டில் பயணிப்பதால், மாத பிற்பகுதியில் செவ்வாய் பார்வை கிடைக்கிறது.வக்ர சனியை சுக்கிரன் பார்வை படும் போது சந்தோஷங்கள் அதிகரிக்கும். குரு பகவான் வக்ர நிவர்தியடைந்து உங்க ராசியை முழுமையாக பார்ப்பதால் உங்களுக்கு அதிர்ஷ்டங்கள் முழுமையாக கிடைக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள புதன் மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் ஆட்சி உச்சம் பெற்று அமரப்போகிறார்.சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நண்பர்கள் மூலம் லாபம் கிடைக்கும். இந்த மாதம் வண்டி வாகனம் வாங்கலாம்.தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். உறவினர்கள் விசயத்தில் கவனமாக இருங்க. புதிய கலைகளை கற்றுக்கொள்ளலாம். மாணவர்களுக்கு வெற்றிகரமான மாதம். லாபமும், செல்வ வளமும் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் அமைந்துள்ளது. சூரியனும் புதனும் இணைந்து நல்ல மாற்றத்தை கொடுப்பார்கள். கணவன் மனைவி ஒற்றுமை கூடும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். பிரச்சினைகள் நீங்கி நிம்மதி அதிகரிக்கும். அரசு வேலைகள் தேடி வரும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு கட்டும் யோகம் வருகிறது. சுக்கிரன் இடப்பெயர்ச்சியும் செவ்வாயின் பார்வையும் இணைந்து உங்களுக்கு பண வருமானத்தை கொடுப்பார்கள்.அதி சுகாதிபதியும் 12ஆம் அதிபதியும் ஆட்சி பெற்று அமர்வது விபரீத ராஜயோகத்தை கொடுப்பார்கள். உங்களுக்குள் இருக்கும் ரகசியத்தை காப்பாற்ற முடியாமல் தவிப்பீர்கள் கவனமாக இருங்க அதுவே பிரச்சினையாகி விடும். புதிய வேலைக்கு முயற்சி பண்ணுங்க அதை கிடைத்த உடன் பழைய வேலையை விடலாம். இந்த மாதம் பதவி உயர்வும் சிலருக்கு தேடி வரும்.உங்களின் நீண்ட கால கனவு நிறைவேறும். பரிசும் பாராட்டும் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் நிறைந்த மாதமாக ஆவணி மாதம் அமைந்துள்ளது. கணவன் மனைவி இடையை சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து செல்லும் விட்டுக்கொடுத்து போங்க. மாணவர்களுக்கு மனதுக்கு பிடித்த கல்லூரியில் பிடித்த பாடத்தை படிக்க இடம் கிடைக்கும்.மிதுனம்:புதனை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு உங்க ராசியில் இருக்கும் கூட்டணி பிரிகிறது. ராகு உடன் இணைந்துள்ள சுக்கிரன் பிரிந்து இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார்.மூன்றாம் வீட்டில் சூரியனுடன் இணைந்துள்ள புதன் பகவான் மாத பிற்பகுதியில் பிரிந்து தனது வீடான கன்னி ராசியில் சென்று ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பு. புதிய வேலைகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் நீங்கள் செய்யும் மாற்றங்களினால் நல்ல லாபம் கிடைக்கும்.

வரப்போகும் நாட்கள் எல்லாம் நல்ல நாட்களே, உங்க முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். உங்க லாப ஸ்தான அதிபதி செவ்வாய் லாப ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருப்பதால் உங்களின் தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் திடீர் லாபம் வரும். ஏழாம் வீட்டில் உள்ள குரு வக்ரநிவர்த்தி அடைந்து பரிபூரணமாக உங்க ராசியை பார்க்கிறார். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். திருமணப்பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். திருமணம் முடிந்த தம்பதியினருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் நிறைய உற்சாகமாக இருப்பீர்கள்.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசிக்கு சுக்கிரன் வருவது சிறப்பு. ராசிக்கு இரண்டாம் வீட்டில் சூரியன் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார்.மாத பிற்பகுதியில் இரண்டாம் வீட்டில் உள்ள புதன் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு சென்று தனது வீட்டில் ஆட்சி உச்சம் பெற்று சஞ்சரிப்பார். குருவின் வக்ர நிவர்த்தியும் உங்க ராசியில் உள்ள சுக்கிரனின் பார்வை ஏழாம் வீட்டில் உள்ள சனிபகவான் மீது விழுவதாலும் பல அற்புதங்கள் நிகழப்போகிறது.இதுநாள்வரை பட்ட கஷ்டத்திற்கு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. இந்த மாதம் உங்களுக்கு வரக்கூடிய நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். கணவன் மனைவி உறவில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம் விட்டுக்கொடுத்து போங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. மாத பிற்பகுதியில் திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வரவு வரும்.உங்களுக்கு வரக்கூடிய பணத்தை சேமிக்கத் தொடங்குங்கள். கோபம் வேண்டாம் எந்த பிரச்சினை என்றாலும் கவனமாக கையாளுங்கள். இல்லத்தரசிகள் சந்தோஷமாக இருப்பீர்கள் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களின் மகிழ்ச்சியும் நிம்மதியும் கூடி வரும். வண்டி வாகனங்களில் போகும் போது கவனம். வேலைக்கு பெண்கள் எதிராளிகளுடன் பழகும் போது கவனமாக இருங்க வீண் பழியில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். வீர ஆஞ்சநேயரை வணங்குங்கள் பாதிப்புகள் நீங்கி நல்லது நடக்கும்.