தற்போதைய நிலையை விட 10 மடங்கு வேகத்தில் தாக்கும் திறன் பெற்ற பரிணாம வளர்ச்சியடைந்த கொரோனா…!! மலேஷியாவில் கண்டுபிடிப்பு.!!

தற்போதுள்ள கொரோனா வைரஸ் தொற்றை விட 10 மடங்கு அதிகமாக பரவக் கூடிய வீரியமிக்க கொரோனா வைரஸ் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது, என சற்று முன் ஏஜன்சி செய்திகள் குறிப்பிடுகிறது. இதற்கு D614ஜி என்று பெரிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் இருந்து சமீபத்தில் மலேசியா சென்ற உணவக உரிமையாளர் ஒருவருக்கு பிறழ்வுடன் கூடிய கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு புதிய ‘D614ஜி’ எனப்படும் பிறழ்வு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது கொரோனாவை விட 10 மடங்கு அதிகமாக பரவக் கூடியதாக இருப்பது தெரியவந்துள்ளது.இதுகுறித்து மலேசிய சுகாதார இயக்குனர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தள்ளதாவது: மலேசியாவில் தற்போது பதிவாகும் 45 கொரோன பாதிப்புகளில் குறைந்தது மூன்று பாதிப்புகள் பிறழ்வு கொரோனா பாதிப்புகளாக உள்ளன. குறிப்பாக இந்தியா, பிலிப்பைன்சிலிருந்து திரும்பும் மக்களிடம் இது போன்ற வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.அதாவது கொரோனா வைரஸ் தற்போது பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. அல்லது அது ஏற்கனவே வேறு வைரஸ் தாக்கப்பட்டுள்ள நபரை தாக்கி. அந்த வைரசோடு இனப்பெருக்கம் செய்து மேலும் சக்திவாய்ந்த வைரசாக உருமாறியுள்ளதா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.