யாழில் அரிசிக்கு தட்டுப்பாடு… கட்டுப்பாட்டு விலையையடுத்து பதுக்கல்..!!அதிகாரிகள் தேடுதல் வேட்டை..!!

அரசியின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டதும், யாழின் பல பகுதிகளிலும் அரசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெரும் வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி, செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதாக பரவலாக விமர்சனம் எழுந்துள்ளது. கொரோனா நெருக்கடியை தொடர்ந்து வடக்கின் பல பகுதிகளிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்தது. வெளிநாட்டு இறக்குமதி பொருட்கள் மட்டுமல்லாமல், உள்ளூரில் உற்பத்தியாகும் அரிசியின் விலையும் எகிறியது.கிளிநொச்சியில் இருந்து நெல் விநியோகம் செய்யப்பட்டபோது, யாழிலுள்ள பிரபல அரிசி ஆலையொன்றிற்கே வழங்கப்பட்டிருந்தது. அதேபோலவே, அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நெல்லும் பிரபலமான ஓரிரு ஆலைகளிற்கே யாழில் வழங்கப்பட்டதாக தெரிகிறது.

உள்ளூரில் உற்பத்தியான அரிசியையும் அதிக விலைக்கு அவர்கள் விற்பனை செய்தனர்.இந்த நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கொரோனா தடுப்பு செயற்திட்டத்தில் அரிசி ஆலைகளின் சேவையையும் அத்தியாவசியமாக்கினார். அத்துடன், அரசியின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.அரிசி வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டதும், அந்த வகை அரிசிகளிற்கு யாழில் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. யாழ் நகரத்திலுள்ள பிரதான சில வர்த்தக நிலையங்களும் அரிசியை இல்லையென தெரிவித்துள்ளனர். இன்று யாழிலுள்ள பல முக்கிய வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாட்டு விலை அரிசி முடிந்து விட்டதாக கூறப்பட்டதாக, பல பகுதிகளிலுமுள்ள மக்கள் குற்றம்சாட்டினர்.அதேவேளை, நகரில் பல கடைகளில் கட்டுப்பாட்டு விலையை மீறி அதிகம் விலைக்கு விற்பனை செய்ததையும் அவதானிக்க முடிந்தது.ரிசி பதுக்கலையும், அதிக விலைக்கு விற்பதையும் தடுக்க இன்றே அதிகாரிகள் களத்தில் இறங்கியிருக்க வேண்டும். எனினும், அதிகாரிகள் வழக்கம் போல வாளாவிருந்தனர். இந்த நிலையில், யாழில் பதுக்கல் அரிசியை மீட்கவும், அதிக விலையில் விற்பதை தடுக்கவும் நாளை முதல் பாதுகாப்பு தரப்பினர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கவுள்ளதாக அறிய முடிகிறது.