உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் பாடகர் எஸ்.பி.பி.!! நலம் வேண்டி உலகெங்கும் ரசிகர்கள் பிரார்த்தனை..!!

பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொடர்ந்து உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் ஐசியூவில் வைத்து சிகிச்சையளிக்கப்படுகிறார் என்று, எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள, எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார், எஸ்.பி.பாலசுப்பிரமணியம்.மூன்று நாட்கள் முன்பு, பாலசுப்பிரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இது ரசிகர்களை பெரும் கவலைக்குள்ளாக்கியது.இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலன் பெற இறைவனை வேண்டுவதாக தெரிவித்தனர். இந்த நிலையில், அடுத்த நாளே, அவரது உடல்நிலை முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: எம்ஜிஎம் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ள எஸ்பி பாலசுப்பிரமணியம் ஐசியூவில் தொடர்ந்து உயிர்காக்கும் உபகரணங்களின் சிகிச்சை உதவியுடன் உள்ளார். மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, எஸ்.பி.பி தங்க வைக்கப்பட்டுள்ள அறையில், அவர் பாடிய பிரபல பாடல்கள் ஒலிக்கவிடப்படுகின்றன. “முதல்முறை பாடல் பாடியபோது தெரியாது.. இசை என்னை 50 வருடம் பயணிக்க வைக்க போகுதுன்னு..” என்று கூறியவர் எஸ்பிபி. இசை அவருக்கு ஒரு அருமருந்து. எனவேதான், பாடல்கள் இசைக்கவிடப்படுகின்றன.எஸ்.பி.பாலசுப்பிரமணியமுக்கு பிளாஸ்மா சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மயக்க நிலையிலிருந்து மீண்ட எஸ்பிபி தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து மாற்றப்பட்டு வார்டில் சிகிச்சை பெறுகிறார். இந்த நிலையில்தான், இசை சிகிச்சைகள் நல்ல பலனைத் தருவதாக மருத்துவர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். தனது, இனிய குரலால் பலரை மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்பிரமணியம், தான் பாடிய பாடலை கேட்டு மீண்டு வருவார் என்று காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.